Kathir News
Begin typing your search above and press return to search.

மேகதாதுவில் அணை கட்ட இன்றே பூமி பூஜை நடத்தனும்.. கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார்.!

மேகதாது அணை கட்டுவதற்கு இன்றே பூமி பூஜை நடத்த வேண்டும் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கருத்து தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு தமிழக கட்சிகள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றது.

மேகதாதுவில் அணை கட்ட இன்றே பூமி பூஜை நடத்தனும்.. கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  13 July 2021 10:58 AM IST

மேகதாது அணை கட்டுவதற்கு இன்றே பூமி பூஜை நடத்த வேண்டும் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கருத்து தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு தமிழக கட்சிகள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றது.

இதனிடையே நேற்று தமிழகத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. தமிழக அரசு அனுமதியின்றி அணை கட்ட அனுமதி அளிக்கக்கூடாது என விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில், பெங்களூரில் செய்தியாளரகளை சந்தித்த கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், 100 ஆண்டுகள் கடந்தாலும் அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டுதான் இருக்கும். அதனை பொருட்படுத்தாமல் இன்றே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு பூமி பூஜை நடத்த வேண்டும்.

மத்தியில் பாஜக அரசு, மாநிலத்திலும் பாஜக அரசு எனவே உடனே பணிகளை தொடங்குங்கள். அனைத்து முயற்சிகளுக்கும் காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என பேசியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள டெல்டா விவசாயிகள் காவிரி நீரை நம்பியே உள்ளனர். தற்போது மேட்டூர் அணையில் 75 அடிக்கும் கீழ் தண்ணீர் சென்று கொண்டிருக்கும் நிலையில், மேகதாதுவில் புதிய அணை கட்டப்பட்டால் டெல்டா பகுதிகள் வறட்சிக்கு செல்லும் நிலையே உருவாகும் என விவசாயிகள் கண்ணீர் மல்க தெரிவித்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News