இந்தியாவில் தடை செய்யப்பட்ட மதபோதகர் ஜாகீர் நாயக் கத்தாரில் ஹாயாக இருக்கிறாரா? ஊடகங்கள் சொல்லும் தகவல்!
By : Kathir Webdesk
ஜாகீர் நாயக், மஹாராஷ்ட்ரா மாநிலம், மும்பையில் பிறந்தவர். 1991-ம் ஆண்டு தாவா என்ற மதப்பிரச்சாரத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தாவா என்பது இஸ்லாமிய மதத்தை பிறரை தழுவச் செய்யும் பணி எனக் கூறப்படுகிறது.
ஆனால் இவரது பிரச்சாரங்கள் வெறுப்பை தூண்டுவதாக, பிரிவினையை ஊக்குவிப்பதாக, தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ஜாகீர் நாயக் நடத்திய இஸ்லாமிய ஆய்வு அறக் கட்டளையை சட்ட விரோத அமைப்பாக மத்திய அரசு அறிவித்தது.
2016ல் இந்த தடை அமலுக்கு வந்தது. அதன்பின்னர் 2017ல் ஜாகீர் நாயக் மலேசியாவிற்கு சென்றார். அதன்பின்னர் அவர் இந்தியா திரும்பவே இல்லை. இந்தியா அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.
இந்நிலையில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட மதபோதகர் ஜாகீர் நாயக் கத்தார் நாட்டில் நிகழும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மதச் சொற்பொழிவுகள் நிகழ்த்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கத்தார் அரசுக்கு சொந்தமான அல்காஸ் என்ற விளையாட்டு சேனல் தொகுப்பாளர் ஃபைசல் அல்ஜாரி உறுதிப்படுத்தியுள்ளார். உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் முடிவுறும் வரையில் அவர் மத சொற்பொழிவுகள் நிகழ்த்துவார்" என்று பதிவிட்டுள்ளார்.
Input From: Hindu