Kathir News
Begin typing your search above and press return to search.

சோனியாவிடம் விசாரணை: அமலாக்கத்துறை அலுவலகம் வெளியே காருக்கு தீ வைத்த காங்கிரஸ்!

சோனியாவிடம் விசாரணை: அமலாக்கத்துறை அலுவலகம் வெளியே காருக்கு தீ வைத்த காங்கிரஸ்!
X

ThangaveluBy : Thangavelu

  |  21 July 2022 1:05 PM GMT

நேஷனல் ஹெரால்டு நாளிதழை வெளியிட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவன சொத்துகள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் எம்.பி., ராகுல் காந்தி பங்குதாரர்களாக இருக்கும் யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்ட சமயத்தில் பண மோசடி நடைபெற்றதாக கூறி பா.ஜ.க., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணையை மத்திய அமலாக்கத்துறை நடத்தி வரும் நிலையில், கடந்த மாதம் 8ம் தேதி ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் கொரோனா தொற்று இருப்பதாக கூறி சோனியா காந்தி ஆஜராக கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கோரியிருந்தார். மேலும், ஜூலை 21ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை இயக்குனரகம் சம்மன் அனுப்பியிருந்தது.

இந்நிலையில், சோனியா காந்தி அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று (ஜூலை 21) நேரில் ஆஜரானார். அவரிடம் மூன்று மணி நேர விசாரணை நிறைவடைந்த நிலையில், மீண்டும் ஜூலை 25ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டது.

மேலும், சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்களை நடத்தினர். அதே போன்று கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் அமலாக்கத்துறை அலுவலகம் வெளியில் நிறுத்தப்பட்ட காருக்கு தீ வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News