ராகுலுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டதா.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு என்ன..
ராகுல் காந்திக்கு இடைக்கால நிவாரணம் வழங்குவதற்கு நீதி மன்றம் மறுப்பு தெரிவித்து இருக்கிறது.
By : Bharathi Latha
கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏப்ரல் 13-ஆம் தேதி 2019 ஆம் ஆண்டில் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி கூறுகையில், "அனைத்து திருடர்களுக்கும் மோடியின் குடும்பப்பெயர் உள்ளது" என்ற கிரிமினல் அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இடைக்கால நிவாரணம் வழங்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. தனி நீதிபதி ஹேமந்த் பிரச்சக் காந்திக்கு ஆதரவாக எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க மறுத்து, கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் நீதிமன்றம் மீண்டும் திறந்த பிறகு இந்த விஷயத்தில் இறுதித் தீர்ப்பை அறிவிப்பேன் என்று கூறினார்.
மோடியின் குடும்பப்பெயருடன் திருடர்கள் பற்றிய காந்தியின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏ பூர்ணேஷ் மோடி தாக்கல் செய்த புகாரில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு கிரிமினல் அவதூறுக்காக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. கோடை விடுமுறைக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி பிரச்சக் கூறினார். உயர் நீதிமன்றம் மே 8 முதல் ஜூன் 4 வரை மூடப்பட்டிருக்கும், விடுமுறை பெஞ்சுகள் அவசர வழக்குகளை மட்டுமே எடுத்துக் கொள்ளும்.
உயர்நீதிமன்றம் தனது உத்தரவில், “இந்த வழக்கை விசாரித்துள்ளதால், நீதியின் நலன் கருதி, இந்த நிலையில் இடைக்கால பாதுகாப்பு வழங்க முடியாது. எனவே, இடைக்கால பாதுகாப்பு கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. எனவே இடைக்கால நிவாரணத்தை வழங்க குஜராத் நீதிமன்றமும் மறுத்துவிட்ட நிலையில் எம்.பி பதவி பறிப்பில் இருக்கும் இப்போதைக்கு ராகுல் காந்தி எந்த ஒரு நிவாரணத்தையும் பெற இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: swarajya News