4,002 ரயில் பெட்டிகள் கொரோனா சிகிச்சைக்கு தயார்.!
கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனை மற்றும் கொரோனா சிறப்பு வார்டுகளை மத்திய, மாநில அரசுகள் தயார் படுத்தி வருகின்றது.

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், மத்திய ரயில்வேத்துறை அதற்கான முன்னேற்பாடுகளையும் செய்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனை மற்றும் கொரோனா சிறப்பு வார்டுகளை மத்திய, மாநில அரசுகள் தயார் படுத்தி வருகின்றது.
பல்வேறு மாநிலங்களில் படுக்கைகள் குறைவாக இருப்பதாக புகார்கள் வரத்தொடங்கியுள்ளது. இதனையடுத்து மத்திய அரசுக்கு சொந்தமான ரயில்வேத்துறையில் உள்ள ரயில் பெட்டிகளை கொரோனா வார்டுகளாக மாற்ற முடிவு செய்துள்ளது. அதன்படி கொரோனா சிகிச்சைக்காக 4,002 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
இது பற்றி ரயில்வே நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இதுவரை 4,002 பெட்டிகளை மாற்றி தயார் நிலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 16 மண்டலங்களில் இந்த பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், மாநில ரசுகளின் கோரிக்கைகக்கு ஏற்ப பெட்டிகள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. கடந்த முறையும் கொரோனா சிகிச்சைக்காக ரயில் பெட்டிகளை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.