Kathir News
Begin typing your search above and press return to search.

கிராமங்களில் தாமரை மலர்ச்சி! வியப்பு தரும் முடிவுகள்!

கிராமங்களில் தாமரை மலர்ச்சி! வியப்பு தரும் முடிவுகள்!

கிராமங்களில் தாமரை மலர்ச்சி! வியப்பு தரும் முடிவுகள்!

Rama SubbaiahBy : Rama Subbaiah

  |  22 Dec 2020 4:39 PM GMT

ராஜஸ்தான் மாநிலத்தில் 21 மாவட்டஊராட்சிகளில் 14-ல் பாஜக வென்றது. ஆளும் காங்கிரஸ் கட்சி 5-ல் மட்டுமே வென்றது. ஒன்றிய அளவிலான பஞ்சாயத்து சமிதிகளில் மொத்தம் உள்ள 222 இடங்களில் பாஜக 100 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் கிராமப்புறங்கள், மாவட்ட பகுதிகளில் காங்கிரஸ் அதிக இடங்களில் தோற்ற போதிலும், நகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் அதிக இடங்களில் வென்றுள்ளது. மொத்தம் உள்ள 50 நகரங்களில் 36 நகராட்சிகளை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 12 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

நகராட்சி தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த நிலையில் பாரதீய ஜனதா கட்சி 12 நகராட்சிகளில் மட்டுமே வென்றுள்ளது. ஆனால் காங்கிரஸ் 36 இடங்களில் வென்றுள்ளது. சுயேச்சைகள் இரண்டு இடங்களில் வென்றுளளனர்.

ஜெய்ப்பூர் மாவட்டத்தில், தேர்தல்கள் நடந்த 10 நகராட்சிகளில்9 இடங்களை காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது, பக்ரு என்ற நகராட்சியை சுயேட்சை வென்றுள்ளார். ஜெய்ப்பூர் மாவட்டத்தில் சாம்பார் ஏரி உட்பட10 நகராட்சிகளை காங்கிரஸ் வென்றுள்ளது. ராஜஸ்தானின் 50 நகராட்சி அமைப்புகளின் தலைவர் பதவிகளுக்கான தேர்தல்கள் முடிந்தது. இதில், காங்கிரஸ் கட்சி 36 இடங்களில் வென்றுள்ளது.பாஜக 12ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இன்னும் தொடர்ந்து சில இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. வெற்றி பெற்ற இடங்களில் இரு கட்சியினரும் கொண்டாடி வருகின்ற்றனர்.

கிராமப்புறங்களில் பெற்றவெற்றி பாஜகவினருக்கு அளவு கடந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என்று பாஜகவினர் கூறி மகிழ்ந்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News