ராஜஸ்தான் மாநிலத்தில் ஜூன் 8 வரை முழு பொது முடக்கம் நீட்டிப்பு.!
கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை பரவல் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் முழு பொதுமுடக்கத்தை வருகின்ற ஜூன் 8ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.

By : Thangavelu
கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை பரவல் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் முழு பொதுமுடக்கத்தை வருகின்ற ஜூன் 8ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையால் பல லட்சம் மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது.
அதே போன்று வடமாநிலங்களிலும் தொற்று எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. இதில் முழுமையான பலன் அளிப்பதாக மருத்துவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராஜஸ்தானில் கொரோனா தொற்று காரணமாக இதுவரை 7,703 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்படுகிறது. இதுவரை அம்மாநிலத்தில் 9 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அம்மாநிலத்தில் உள்ள மருத்துவ வல்லுநர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், ஏற்கனவே ராஜஸ்தானில் பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், தற்போது முழு பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதம் ஜூன் 8ம் தேதி காலை 5 மணி வரை பொது முடக்கத்தை நீட்டித்து அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.
