போர்க்கால அடிப்படையில் மருத்துவமனைகளுக்கு உதவ வேண்டும்.. முப்படைகளுக்கு உத்தரவிட்ட மத்திய அமைச்சர்.!
தினமும் கொரோனா கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் படுக்கைகள், மருந்துகள் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக புகார்கள் வருகிறது.

By : Thangavelu
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகள் திண்டாடி வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தினமும் கொரோனா கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் படுக்கைகள், மருந்துகள் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக புகார்கள் வருகிறது.
இந்தநிலையில், முப்படைகளின் உயர் அதிகாரிகளுடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோனைக் கூட்டத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே, கடற்படை தளபதி கரம்பீர் சிங், பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார், ஆயுதப்படை மருத்துவ சேவைகள் தலைமை இயக்குனர் ரஜத் தத்தா, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவன தலைவர் சதீஷ் ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.
இதனிடையே, இந்த கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், "முப்படையினரும் நாடு முழுவதும் அரசு நிர்வாகங்களுடன் தொடர்ந்து ஈடுபட வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.
மேலும், மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்கள், படுக்கைகள், மருந்து பொருட்களை போர்க்கால அடிப்படையில் மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டும். முப்படையினருக்கு மருத்துவ பொருட்களை வாங்குவதற்கு நிதி அதிகாரம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
