தமிழக அலங்கார ஊர்தி இடம்பெறாதது ஏன்? மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!
By : Thangavelu
ஜனவரி 26 குடியரசு தின விழாவின்போது ஒவ்வொரு மாநிலத்தின் சார்பாக அலங்கார ஊர்தி அணிவகுப்பு இடம் பெறுவது வழக்கம். அதே போன்று இந்த ஆண்டு தமிழக ஊர்திக்கு அனுமதியை கமிட்டி வழங்கவில்லை. அதற்கான காரணத்தையும் கூறியுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஏன் அலங்கார ஊர்தி இடம்பெறவில்லை என்ற விளக்கத்தையும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். வருடம்தோறும் குடியரசு தினவிழாவின் போது டெல்லியில் மிக சிறப்பாக நடைபெறும். இந்த விழாவில் ஒவ்வொரு மாநிலம் சார்பிலும் அலங்கார ஊர்தி அணி வகுப்பு நடைபெறும். அதன்படி இந்த வருடத்தில் சில மாநிலங்களின் ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதற்கு மாநில முதலமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.
இந்நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பதற்கு நன்கு நிறுவப்பட்ட அமைப்பு செயல்படுகிறது. அவைதான் தேர்வு செய்கின்றன. அதே போன்று மாநிலங்களின் வாகன ஊர்திக்கு முன்மொழிவுகளை அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதன் பரிந்துரைகளை செய்வதற்கு முன்பாக கருப்பொருள், கருத்து, வடிவமைப்பு மற்றும் அதன் காட்சி தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆராயப்படுகிறது. அவை குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திகளின் தேர்வுக்கு தெளிவான விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது. அதே போன்று தமிழகம் முன்மொழிவு உட்பட மொத்தம் 29 திட்டங்கள் பெறப்பட்டிருந்தது. அதில் முதல் 3 சுற்றுகள் வரை தமிழகத்தின் அலங்கார ஊர்தி பரிசீலனை செய்யப்பட்டது. ஆனால் அவை இறுதிப்பட்டியலில் இடம்பெறவில்லை. இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Source: Puthiyathalaimurai
Image Courtesy: The Economic Times