கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தயங்கக்கூடாது.. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.!
நாடு முழுவதும் 2ம் கட்ட கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் 60 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

By : Thangavelu
நாடு முழுவதும் 2ம் கட்ட கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் 60 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.
இதில் கடந்த 2 நாட்களாக பிரதமர் மோடி மற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இதனால் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பலர் தடுப்பூசிகளை பயமின்றி போட்டுக்கொண்டனர். பிரதமர் மோடி நம்பிக்கையூட்டும் விதமாக தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், டெல்லி ராணுவ மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதன் பின்னர் அவர் பேசியதாவது: வரலாற்றில் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், தகுதியுள்ள அனைத்து குடிமக்களுக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.