உலகின் வேகமாக வளரும் இந்தியா பொருளாதாரம்: RBI கவர்னர் நம்பிக்கை!
இந்தியாவின் உலகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கிறது என்ற RBI கவர்னர் நம்பிக்கை.
By : Bharathi Latha
பொருளாதார அடிப்படையில் வலுவாக இருந்தாலும் நாட்டின் நிதி துறை நல்ல நிலைமையுடன் இருப்பதால் உலகில் வேகமாக வளரும் பொருளாதார நீடிக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் கூறியிருக்கிறார். டெல்லியில் நடைபெற்ற ஆங்கிலேயர் நாளிதழ் சார்பில் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்பொழுது அவர் கூறுகையில், கொரோனா தொற்று பரவல், உக்கரையின் போர், நிதி சந்தை நெருக்கடி என்ற முப்பெரும் சவால்களை சர்வதேச பொருளாதாரம் சந்தித்து வருகிறது.
அதிகரித்து வரும் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் மத்தியில் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தி வருவதால் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சர்வதேச நிகழ்வுகளின் தாக்கம் இந்திய பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி எதிர் கொண்டு வருகின்றது. இந்தியாவில் பொருத்தவரை பொருளாதார அடிப்படை வலுவாக உள்ளது நாட்டின் நிதி நிலையில் நல்ல நிலையில் இருக்கிறது.
நாட்டின் வங்கி துறையும், வங்கி சாராத நிதி நிறுவனங்கள் துறையும் வலுவாக இயங்கி வருகிறது. தற்போதைய சூழலில் பொருளாதர வளர்ச்சி கணிப்புகள் சிறப்பாக உள்ளது. நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏழு சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். எதிர்கால தேவைக்காக அன்னிய செலவாணி சேமிப்பு தற்பொழுது இந்தியாவிடம் கைவசம் உள்ளது. இன்றைய சூழ்நிலையில் அந்நிய செலவழி கையிருப்பு போதுமான அளவில் இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
Input & Image courtesy: