Kathir News
Begin typing your search above and press return to search.

இந்த ஆண்டு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.5 சதவீதம் ஆக இருக்கும் - கொரோனா பெருந்தொற்றை தாண்டி படைக்கப்பட்ட சாதனை..!

RBI keeps key interest rates unchanged

இந்த ஆண்டு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.5 சதவீதம் ஆக இருக்கும் - கொரோனா பெருந்தொற்றை தாண்டி படைக்கப்பட்ட சாதனை..!
X

MuruganandhamBy : Muruganandham

  |  9 Oct 2021 4:56 AM GMT

தொடர்ந்து எட்டாவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் செய்யாமல் 4 சதவீதமாக இந்திய ரிசர்வ் வங்கி வைத்துள்ளது. ரிசர்வ் ரெப்போ விகிதமும் எந்த மாற்றமும் இல்லாமல் 3.35 சதவீதம் எனும் அளவில் உள்ளது.

ஆறு நபர் நிதி கொள்கை குழுவின் முடிவுகளை அறிவித்த இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு சக்தி காந்த தாஸ், 2021-22 நிதி ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 9.5 சதவீதம் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.

வளர்ச்சிக்கு புத்தாக்கம் அளித்து பொருளாதாரம் மீது கொவிட்-19 ஏற்படுத்தியுள்ள பாதிப்பை குறைத்து, பணவீக்கத்தை கட்டுக்குள் வைப்பதற்கான முடிவுகளை நிதி கொள்கை குழு எடுத்துள்ளது என்று ஆளுநர் தாஸ் கூறினார்.

பெருந்தொற்றின் தொடக்கத்தில் இருந்து வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் விளக்கினார். 2021-22 நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ரூ 2.37 லட்சம் கோடியை திறந்தவெளி சந்தை நடவடிக்கைகளின் மூலம் நிதி அமைப்புக்குள் ரிசர்வ் வங்கி செலுத்தியதாக அவர் கூறினார்.

2020-21 மொத்த நிதியாண்டில் இவ்வாறு செலுத்தப்பட்ட ரூ 3.1 கோடியுடன் ஒப்பிடும் போது, 2021-22 நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே ரூ 2.37 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், சிறு மற்றும் அமைப்புசாரா தொழில்களுக்கு ஆதரவளிப்பதற்காக உடனடி பண பரிவர்த்தனை (IMPS) அளவை ரூ 2 லட்சத்தில் இருந்து ரூ 5 லட்சமாக உயர்த்துவது, ரூ 10,000 கோடியை சிறு நிதி வங்கிகளுக்கு வழங்குவது உள்ளிட்ட அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News