Kathir News
Begin typing your search above and press return to search.

பேச்சுவார்த்தைக்கு தயார்.. டெல்லி புராரி மைதானத்துக்கு வாருங்கள்: விவசாயிகளுக்கு அமித்ஷா அழைப்பு.!

பேச்சுவார்த்தைக்கு தயார்.. டெல்லி புராரி மைதானத்துக்கு வாருங்கள்: விவசாயிகளுக்கு அமித்ஷா அழைப்பு.!

பேச்சுவார்த்தைக்கு தயார்.. டெல்லி புராரி மைதானத்துக்கு வாருங்கள்: விவசாயிகளுக்கு அமித்ஷா அழைப்பு.!
X

Rama SubbaiahBy : Rama Subbaiah

  |  29 Nov 2020 10:49 PM IST

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் பஞ்சாப் மாநில விவசாயிகள் வந்தனர் . அவர்கள் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

ஆனால் விவசாயிகள் தடுப்பை மீறி உள்ளே செல்ல முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது, இந்த நிலையில் அங்கு அசம்பாவித சம்பவங்கள் நேரிடலாம் எனக் கருதிய டெல்லி போலீசார் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியும், தண்ணீர் பீய்ச்சிகள் மூலம் நீர் அடித்தும் கூட்டத்தை கலைக்க முயன்றனர்.

இருப்பினும் விவசாயிகள் போராட்டம் வலுத்ததையடுத்து, அவர்களை டெல்லிக்குள் குறிப்பிட்ட மைதானத்துக்கு மட்டும் செல்ல செல்ல காவல்துறையினர் அனுமதியளித்தனர்.

இதையடுத்து, டெல்லியில் உள்ள நிரங்காரி மைதானத்தில் விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விவசாயிகளோ, ஜந்தர் மந்தர் மற்றும் ராம் லீலா மைதானத்தில்தான் போராட்டம் நடத்துவோம் என்று உறுதியாக கூறினார்கள். இந்நிலையில், டெல்லி-ஹரியாணாவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியான டிக்ரியில் விவசாயிகள் குவிந்தனர். அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விவசாயிகள் டிக்ரி பகுதியிலிருந்து வடக்கு டெல்லியில் உள்ள புராரி மைதானத்துக்குச் செல்ல வேண்டும். அங்கு வாருங்கள் ..உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News