வேளாண் சட்டத்தை நிறுத்தி வைக்க தயார்! மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் அதிரடி!
வேளாண் சட்டத்தை நிறுத்தி வைக்க தயார்! மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் அதிரடி!
By : Kathir Webdesk
புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களிடம் மத்திய அரசு 9 முறை பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அதற்கு அவர்கள் உடன்படவில்லை. வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்து செய்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருகிறோம் என திட்டவட்டமாக விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், வேளாண் சட்டங்களை அமல்படுத்தாமல் 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாகவும், அதற்காக தனியாக ஒரு குழு அமைத்து அவர்களுடன் பேசி தீர்வு காணலாம் என்று மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.
எனவே போராட்டத்தை கைவிடுவதை இன்று பேசி முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே விவசாயிகள் நாளை அல்லது அதற்கு அடுத்த நாள் பேசி ஒரு சுமுகமான முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.