Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வரலாற்றிலேயே முதன்முறையாக நடந்த சம்பவம் - சாதனையை நோக்கி பொதுத்துறை நிறுவனம்!

REC Limited closes US$75million SOFR linked Term Loan with Sumitomo Mitsui Banking Corporation (SMBC)

இந்திய வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வரலாற்றிலேயே முதன்முறையாக நடந்த சம்பவம் - சாதனையை நோக்கி பொதுத்துறை நிறுவனம்!

MuruganandhamBy : Muruganandham

  |  21 Oct 2021 5:15 PM GMT

இந்திய வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வரலாற்றில் முதல் முறையாக, ஐந்து வருடத்திற்கான 75 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கூட்டுக் கடனை REC Limitedபெற்றுள்ளது.

Sumitomo Mitsui Banking Corporation (SMBC) இதற்கான ஒரே ஏற்பாட்டாளராக நியமிக்கப்பட்டிருந்தது. இந்தக் கடனுடன் சேர்த்து, வட்டி பாதுகாப்புக் குறித்த ஒப்பந்தத்திலும் இந்திய பெருநிறுவன வரலாற்றிலேயே முதல் முறையாக REC லிமிடெட் ஈடுபட்டுள்ளது. உள்கட்டமைப்பு மின்சாரத் திட்டங்களுக்கு நிதி உதவி அளிப்பதற்காக ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின் கீழ் இந்தத் தொகை பயன்படுத்தப்படும்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆர்ஈசி தலைவர் சங்கர் மல்ஹோத்ரா, "இந்த நிதியை இந்திய வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வரலாற்றிலேயே முதன்முறையாக பெற்றிருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். இதிலிருந்து பெறப்பட்ட அனுபவம் எங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்," என்று கூறினார்.

1969-ம் ஆண்டு நிறுவப்பட்ட நவரத்னா வங்கி சாரா நிதி நிறுவனமான ஆர்ஈசி, மின்சாரத் துறை நிதி உதவி மற்றும் மேம்பாட்டில் நாடு முழுவதும் ஈடுபட்டுள்ளது. ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்து வெற்றிகரமாக இந்நிறுவனம் இயங்கி வருகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News