Kathir News
Begin typing your search above and press return to search.

பெட்ரோல் மட்டுமே இனி தேவையில்லை! இஞ்ஜின் வடிவமைப்பை மாற்ற சொல்லும் மத்திய அரசு - கைவசம் மாஸ்டர் பிளான்!

பெட்ரோல் மட்டுமே இனி தேவையில்லை! இஞ்ஜின் வடிவமைப்பை மாற்ற சொல்லும் மத்திய அரசு - கைவசம் மாஸ்டர் பிளான்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 Aug 2022 6:45 AM IST

எதிர்காலத்திற்கேற்ற தொழில்நுட்பத்தின் உதவியுடன் மாற்று எரிபொருள் உற்பத்தி குறித்து, தொழில் நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

நமது மக்கள் தொகையில் 65% -70% பேர் விவசாயத்தை சார்ந்துள்ள நிலையில், நமது வேளாண் வளர்ச்சி வீதம் 12%-13%ஆக மட்டுமே உள்ளது; சர்க்கரை ஆலைகளும், விவசாயிகளும் தான் நாட்டின் வளர்ச்சி இயந்திரம். சர்க்கரை மூலம் கூடுதல் வருவாய் ஈட்டும் விதமாக, அடுத்த கட்டமாக இணை உற்பத்தியில் கவணம் செலுத்துவது அவசியம்.

இந்தாண்டில், நமது சர்க்கரைத் தேவை 280 லட்சம் டன் போதும் என்ற நிலையில், 360லட்சம் டன்னிற்கு அதிகமாக உற்பத்தி உள்ளது; பிரேசில் நாட்டின் நிலவும் சூழல் காரணமாக இதனைப் பயன்படுத்த முடியும். எனினும், எத்தனால் தேவை மிக அதிகமாக உள்ளதால், எத்தனால் உற்பத்தியை நோக்கி நாம் கவனம் செலுத்துவது அவசியம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டின் உற்பத்தித் திறன் 400 கோடி லிட்டர் எத்தனால் ஆக இருந்தது; எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டோம். எனவே, எத்தனால் தேவையை கணக்கிட்டு, தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, உயிரி எத்தனால் மூலம் இயங்கக்கூடிய மின்சார உற்பத்தி குறித்து தொழிற்சாலைகள் திட்டமிடுவதற்கு இதுவே சரியான தருணம்" என்றும் அமைச்சர் கூறினார்.

பலவகையான எரிபொருட்களைப் பயன்படுத்தக்கூடிய எஞ்சின் உற்பத்தியை இந்தியாவில் தொடங்க அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறிய அமைச்சர், "பஜாஜ், ஹீரோ மற்றும் டிவிஎஸ் போன்ற நிறுவனங்களை நெகிழுந்தன்மை கொண்ட என்ஜின்களை உற்பத்தி செய்துவருகின்றன, பல்வேறு கார் உற்பத்தியாளர்களும், இத்தகைய எஞ்சின்களைக் கொண்ட காரைத் தயாரிப்பதாக உறுதியளித்துள்ளனர்" என்றும் தெரிவித்தார்.

Input From: Swarajya

Next Story
கதிர் தொகுப்பு
Trending News