Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னை மெட்ரோ ரயில் சேவைக்கான கட்டணம் குறைப்பு.!

சென்னை மெட்ரோ ரயில் சேவைக்கான கட்டணம் குறைப்பு.!

சென்னை மெட்ரோ ரயில் சேவைக்கான கட்டணம் குறைப்பு.!

Saffron MomBy : Saffron Mom

  |  20 Feb 2021 5:42 PM GMT

சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயிலின் கட்டணம் குறைக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி K பழனிசாமி சனிக்கிழமை அறிவித்தார். இந்த நடவடிக்கையானது வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்லாப் கட்டணங்களும் குறைக்கப்படுவதாக முதலமைச்சர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டணங்கள் படி, இரண்டு கிலோமீட்டர் தூரம் செல்லுவதற்கு 10 ரூபாய் நிர்ணைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் அனைத்து பெப்ரவரி 22 இல் நடைமுறைக்கு வரவுள்ளது.
இரண்டிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் செல்லுவதற்கு 20 ரூபாய் கட்டணமாக வைக்கப்பட்டுள்ளது. ஐந்து கிலோமீட்டர்க்கு மேலாகச் செல்லும் பயணிகளுக்கு 30 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படவுள்ளது. அடுத்ததாக 21 கிலோமீட்டர் செல்லும் ரயில் பணிகளுக்கு 40 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

21 கிலோமீட்டருக்கு மேலாகச் செல்லும் பயணிகளுக்கு 50 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்புச் சலுகையாக QR CODE மற்றும் CMRL ஸ்மார்ட் கார்டுகள் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு 20 சதவீதம் சலுகையும் அளிக்கப்படவுள்ளது. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாஷேர்மன்பட்டிலிருந்து விம்கோ நகர் வரை CMRL பாதையைத் திறந்து வைத்தார்.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News