'முதலில் நியாயம் இல்லாமல் தோன்றலாம்! பின்னாளில் தேசம் உயர அவை உதவலாம்' - அக்னிபத் பற்றி பிரதமர் மோடி
By : Thangavelu
சில முடிவுகள் எப்போதும் முதலில் நியாயமற்றதாக தோன்றும், பின்னாளில் அவைதான் தேசத்தை கட்டியெழுப்ப உதவும் என்று அக்னிபத் திட்டம் தொடர்பாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அக்னிபத் என்ற புதிய திட்டத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்கள் நேரடியாக ராணுவத்தில் சேரலாம் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. ஆனால் இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து ரயில்களுக்கு தீ வைப்பது மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம் அக்னிபாத் திட்டத்திற்கு பல கோடி இளைஞர்கள் ஆதரவும் அளித்து வருகின்றனர் என்பது ஒருபுறம் உள்ளது.
இந்நிலையில், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: சில முடிவுகள் முதலில் நியாயமற்றதாக இருக்கலாம். ஆனால் பின்னாளில் அவைகள் தேசத்தை கட்டியெழுப்ப உதவும் என்றார். மேலும், அக்னிபத் திட்டத்தின் பெயரை குறிப்பிடாமல் பிரதமர் மோடி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: News 18 Tamilnadu