Kathir News
Begin typing your search above and press return to search.

"மதம், வருமானத்தை திருமணத்தின் முன் கட்டாயம் வெளிப்படுத்த  வேண்டும்" அசத்தும் அசாம் அரசு.!

"மதம், வருமானத்தை திருமணத்தின் முன் கட்டாயம் வெளிப்படுத்த  வேண்டும்" அசத்தும் அசாம் அரசு.!

மதம், வருமானத்தை திருமணத்தின் முன் கட்டாயம் வெளிப்படுத்த  வேண்டும் அசத்தும் அசாம் அரசு.!

Saffron MomBy : Saffron Mom

  |  2 Dec 2020 6:45 AM GMT

நாட்டில் தொடர்ந்து எழும் லவ் ஜிகாத் குற்றங்களுக்கு எதிராகவும் மற்றும் திருமணத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளிகள் வைக்கவும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஹரியானா போன்றவை சில அவசரச் சட்டங்களைக் கொண்டுவந்தது.

தற்போது அசாம் அரசும் திருமணத்தின் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர ஒரு சட்டத்தை உருவாக்கி வருகின்றது. இது லவ் ஜிஹாத்தை முடிவுக்குக் கொண்டுவரத்தோடு திருமணம் மிகவும் வெளிப்படையாக இருக்கும் என்றும் அந்த சட்டம் உறுதி செய்கின்றது. மேலும் இந்த சட்டம் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலில் பா.ஜ.க மீண்டும் ஆட்சியைப் பிடித்த பின்பும் அமல்படுத்தப் படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம், திருமணம் செய்துகொள்ளும் தம்பதியின் மதம், வருமானம், வேலை போன்ற அவர்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கிய தகவல்களையும் பிற உண்மைகளை வெளிப்படுத்தி கணவன் மனைவியாக மாநிலத்தில் இருப்பதற்கு இது கட்டாய சட்டமாக உள்ளது என்று தெரிவிக்கின்றது. மேலும் இந்த சட்டம் மாநிலத்தில் பெண்களை அங்கீகரிக்கவும் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் ஹிமந்தாபிஸ்வாசர்மா தெரிவித்தார்.

மேலும், "இது கணவன் மனைவிக்கிடையே மதத்தை வெளிப்படையாகத் தெரிவிக்கும் மற்றும் அது சட்டப் பூர்வமாகவும் இருக்கும். மேலும் மதத்தை சமூக ஊடகங்களில் மறைக்க முடியாது," என்றும் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார். தற்போது அசாம் தேர்தலை எதிர்கொள்ள நான்கு மாதங்களே உள்ளதால் தற்போது ஆட்சியில் இருக்கும் காலத்தில் அதனை அமல்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "இது லவ் ஜிகாத் பிரச்சனையைச் சார்ந்தது இல்லை, திருமண வாழ்க்கையில் நுழையும் முன்பும் கணவன் மனைவிக்கு இடையே வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். அதில் மதத்தைத் தவிர அவர்களது வேலை, வருமானம், குடும்ப உறுப்பினர் போன்றவற்றையும் வெளிப்படுத்த வேண்டும். காரணம் சில பெண்கள் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களைத் திருமணம் செய்து கொண்டாலும் பின்னர் அவர்கள் செய்யும் தவறான வேலைகளால் பாதிப்படைகின்றனர்," என்றும் அவர் கருத்தை வெளிப்படுத்தினார்.

அசாம் மாநிலங்களவையில் இந்த சட்டத்தை அமல் படுத்திய பின்பும் ஒரு தனித்துவம் வாய்ந்ததாகத் திகழும். இது லவ் ஜிஹாத்தை கட்டுப்படுத்துவதோடு, பெண்கள் திருமண வாழ்க்கைக்குச் செல்லும் முன்பு நம்பகத் தன்மையைக் கொண்டுவருவதோடு அவர்கள் யாராலும் ஏமாற்றப்படவில்லை என்பதையும் உறுதி செய்யும். பா.ஜ.க அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மை வாய்ந்த சட்டங்களை அவர் உறுதியளித்தார். இதன் மூலம் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலில் அசாமில் ஆட்சியைப் பிடிக்கும் கட்சியில் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகின்றது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News