அன்னிய நேரடி முதலீட்டுக்கு தடையாக இருந்த சக்திகள் அகற்றம்! கைமேல் கிடைத்த பலன்!
அன்னிய நேரடி முதலீட்டுக்கு தடையாக இருந்த சக்திகள் அகற்றம்! கைமேல் கிடைத்த பலன்!

இந்தியா கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை, 58.37 பில்லியன் அமெரிக்க டாலரை அன்னிய நேரடி முதலீடாக பெற்றுள்ளது. ஒரு நிதியாண்டின் முதல் 8 மாதத்தில் கிடைத்த மிக அதிகளவிலான அன்னிய நேரடி முதலீடு இதுவாகும். கடந்த 2019-20 ஆம் நிதியாண்டின் முதல் 8 மாதத்தில் பெற்ற 47.67 பில்லியன் அமெரிக்க டாலரை விட, இது 22 சதவீதம் அதிகம்.
இந்த சூழலில் 2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 11.5 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) கணித்துள்ளது. கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா மட்டுமே உள்ள நிலையில் பொருளாதார வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டு இரட்டை இலக்கங்களில் இருக்கும் என சர்வதேச நிதியம் கணித்துள்ளது.
இரண்டாவது இடத்தில் சீனா 8.1 சதவிகிதம் என்ற அளவில் இருக்கும். ஸ்பெயினில் 5.9 சதவீத வலர்ச்சியும், பிரான்ஸில் 5.5 சதவீத வளர்ச்சியும் இருக்கும் ன்று எதிர்பார்க்கப்படுகிறது.