இந்திய குடியரசு தினவிழா அணிவகுப்பு.. முதல் முறையாக பங்கேற்கும் வங்காளதேச ராணுவம்.!
இந்திய குடியரசு தினவிழா அணிவகுப்பு.. முதல் முறையாக பங்கேற்கும் வங்காளதேச ராணுவம்.!

By : Kathir Webdesk
இந்திய குடியரசு தினவிழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் நமது நாட்டின் முப்படையினர் அணிவகுப்பு நிகழ்த்தி காட்டுவார்கள். இதனை காண்பதற்கு நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் டெல்லியை நோக்கி படையெடுப்பார்கள்.

அதே போன்று இந்த ஆண்டு குடியரசுத் தினவிழா வருகின்ற 26ம் தேதி டெல்லியில் பிரமாண்டமான முறையில் நடைபெறும். இந்த விழாவில் இந்திய ராணுவத்தினர் கலந்து கொள்ளும் முப்படையினரின் அணிவகுப்பு நடைபெறும்.
அப்படி நடைபெறும் அணிவகுப்பில் முதன் முறையாக வங்காளதேச ராணுவத்தினர் பங்குபெறுகின்றனர். வெளிநாட்டு ராணுவம் நமது குடியரசுத்தினவிழா அணிவகுப்பில் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.

இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா என்பது தெரியவில்லை. ஆனாலும் அனைத்து நிகழ்வுகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இதனை நாட்டு மக்கள் தங்களது வீடுகளில் இருந்து நேரடியாக கண்டு மகிழலாம்.
