Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழக அலங்கார ஊர்தி 3 முறை தி.மு.க., காஙகிரஸ் ஆட்சியின்போது பங்கேற்காதது ஏன்? எஸ்.ஜி. சூர்யா கேள்வி!

தமிழக அலங்கார ஊர்தி 3 முறை தி.மு.க., காஙகிரஸ் ஆட்சியின்போது பங்கேற்காதது ஏன்? எஸ்.ஜி. சூர்யா கேள்வி!
X

ThangaveluBy : Thangavelu

  |  17 Jan 2022 11:47 AM GMT

காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்த திமுக அப்போது மத்திய அமைச்சவையில் இடம் பெற்றிருந்தது. அப்போது தமிழக அலங்கார ஊர்திக்கு மூன்று ஆண்டுகள் அனுமதி வழங்கப்படவில்லை பற்றி ஏன் கேள்வி எழுப்பவில்லை என்று தமிழக பாஜக செய்தித்தொடர்பாளர் எஸ்.ஜி.சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் குடியரசு தினவிழா வருகின்ற ஜனவரி 26ம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. இதில் மாநிலங்களில் சார்பில் கலை மற்றும் பண்பாட்டு அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு குடியரசு தினவிழாவின்போது தமிழக ஊர்தி பங்கேற்பதற்கு அனுமதி இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு மத்திய அரசு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறது.

இதற்கு தமிழக பாஜக செய்தித்தொடர்பாளர் எஸ்.ஜி.சூர்யா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: திமுக தமிழகத்திலும் மத்தியிலும் கொடிகட்டி ஆண்ட 2008, 2010, 2011 ஆகிய மூன்று ஆண்டுகளில் தமிழக ஊர்தி குடியரசு தின விழாவின்போது தேர்வாகவே இல்லையே. தேவையான மத்திய மந்திரி இலாக்காக்களை காலில் விழுந்து வாங்கிய கேடுகெட்ட திமுக அரசுக்கு அப்போது தமிழக பெருமை, தன்மானம் தெரியவில்லையோ?? இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source:Twiter

Image Courtesy: Business Today

Next Story
கதிர் தொகுப்பு
Trending News