Kathir News
Begin typing your search above and press return to search.

இயல்பு நிலைக்கு திரும்பும் துறைகள்! கொரோனாவை தாண்டி இந்தியாவில் உச்சம் தொட்ட ஸ்மார்ட்போன்கள் விற்பனை!

இயல்பு நிலைக்கு திரும்பும் துறைகள்! கொரோனாவை தாண்டி இந்தியாவில் உச்சம் தொட்ட ஸ்மார்ட்போன்கள் விற்பனை!

இயல்பு நிலைக்கு திரும்பும் துறைகள்! கொரோனாவை தாண்டி இந்தியாவில் உச்சம் தொட்ட ஸ்மார்ட்போன்கள் விற்பனை!

Muruganandham MBy : Muruganandham M

  |  19 Dec 2020 6:30 AM GMT

கடந்த அக்டோபர் மாதத்தில் 42% ஸ்மார்ட்போன்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக ஐடிசி நிறுவனம் தெரிவித்துள்ளது. முதல் ஐந்து பிராண்டுகளான ஷியோமி, சாம்சங், விவோ, ரியல்மே மற்றும் oppo ஆகியவை அக்டோபர் மாதத்தில் இந்தியா ஸ்மார்ட்போன் சந்தை பங்கில் கிட்டத்தட்ட 90 சதவீதத்தை கைப்பற்றியுள்ளன. 2019 ஆம் ஆண்டில், இந்தியாவில் மொத்தம் 140 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டன.

இந்தியாவின் முதல் 50 நகரங்களில் 36 இடங்களில் சாம்சங் முன்னிலை வகித்தது. பிரீமியம் பிரிவில் அக்டோபரில் 16 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது, ஆப்பிள் முதல் 50 நகரங்களில் 49 சந்தைகளில் முன்னிலை வகிக்கிறது என்று அறிக்கை தெரிவித்துள்ளது.

மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர் செல்போன் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டதால் ஆன்லைன் விற்பனையும் நிறுத்தப்பட்டது. இதனால், ஸ்மார்ட்போன்களுக்கான விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டது.

ஊரடங்கு தளர்த்தப்பட்டு விற்பனை தொடங்கிய போதும் கூட மக்களிடையே பண இருப்பதால் ஸ்மார்ட்போன் வாங்குவோரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

பிறகு, ஜூலை - செப்டம்பர் காலாண்டில் ஓரளவுக்கு ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரித்தது. தொடர்ந்து, அக்டோபர் மாதத்தில் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக இண்டர்நேஷனல் டேட்டா கார்பரேசன் (ஐடிசி) நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட பின்னர் மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா போன்ற நகரங்களை சேர்ந்த மக்கள், ஆன்லைன் மூலம் அதிகளவில் செல்போன்களை வாங்கியிருப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News