தடைகளை கடந்து சாதனை படைப்பதற்கு ரேவதி உதாரணம்: மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பாராட்டு.!
தடைகளை கடந்து வெற்றி பெறுவது எப்படி என்பதற்கு இந்தியத் தடகள வீரர்களின் வாழ்க்கை ஒரு உதாரணமாகத் திகழ்கிறது என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் கூறியுள்ளார்.

By : Thangavelu
தடைகளை கடந்து வெற்றி பெறுவது எப்படி என்பதற்கு இந்தியத் தடகள வீரர்களின் வாழ்க்கை ஒரு உதாரணமாகத் திகழ்கிறது என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு, மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ரேவதி ஆவார். இவர் தனது பெற்றோர்களை இழந்து தனது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். இதனிடையே விளையாட்டில் ஆர்வமுடன் இருந்ததால் இன்று ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். இவருக்கு பிரதமர், மத்திய அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தனது ட்விட்டர் பக்கத்தில், ரேவதி மற்றும் அவரது பாட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் சிறு வயதிலேயே தனது தாய், தந்தையை இழந்த ரேவதி பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவர் எனக் குறிப்பிட்டுள்ளார். ரேவதி தற்போது ஜப்பானில் நடைபெறும் 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
