அடிப்படை உரிமை என்பது மாட்டிறைச்சி உண்பவர்களுக்கு மட்டுமே உரித்தானது அல்ல - பசுவை தேசிய விலங்காக அறிவிக்க பரிந்துரைத்த நீதிபதிகள்!
'Right To Eat Beef Can Never Be Considered A Fundamental Right': Allahabad HC Asks Centre To Declare Cow National Animal
By : Muruganandham
அலகாபாத் உயர் நீதிமன்றம் பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் மற்றும் அதன் பாதுகாப்பை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்று கூறியுள்ளது. நாட்டின் கலாச்சாரம் மற்றும் அதன் நம்பிக்கை பாதிக்கப்படும்போது, நாடு பலவீனமடையும் என்று கூறியது.
பசு வதை குற்றம் சாட்டப்பட்ட ஜாவேத்துக்கு ஜாமீன் வழங்க மறுத்து அலகாபாத் நீதிமன்றம் இந்த முடிவை அறிவித்தது. நீதிபதி சேகர் குமார் யாதவ் தனது 12 பக்க தீர்ப்பில், பசுவைத் திருடிய பிறகு, அதைக் கொன்று, தலை துண்டித்து, அதன் இறைச்சியையும் வைத்திருந்த குற்றம் தொடர்பான விசாரணையின் போது இதனை அறிவித்தார்.
குற்றம் சட்டப்பட்டவர் ஏற்கனவே சமூகத்தின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பசு வதை செய்திருந்தார். அடிப்படை உரிமை என்பது மாட்டிறைச்சி உண்பவர்களுக்கு மட்டுமே உரித்தானது அல்ல. மாறாக, பசுவை வழிபடுவோர் மற்றும் அதனை சார்ந்திருப்பவர்களும் ஒரு நோக்கமுள்ள வாழ்க்கையை நடத்த உரிமை உண்டு. மாட்டிறைச்சி உண்ணும் உரிமையை ஒருபோதும் அடிப்படை உரிமையாக கருத முடியாது.
அரசாங்கம் பாராளுமன்றத்தில் ஒரு மசோதாவை கொண்டுவந்து பசுக்களை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் மற்றும் அவர்களுக்கு தீங்கு விளைவிப்பதைப் பற்றி பேசுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை உருவாக்க வேண்டும் என்று கூறியது.
பசுவின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய நீதிமன்றம், "பசுக்களின் முக்கியத்துவத்தை இந்துக்கள் மட்டும் புரிந்து கொள்ளவில்லை, முஸ்லீம் ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியில் பசுவை இந்தியாவின் கலாச்சாரத்தின் ஒரு முக்கிய பகுதியாக கருதினர். பாபர், ஹுமாயூன் மற்றும் அக்பர் கூட தங்கள் மத விழாக்களில் பசுவதைக்கு தடை விதித்தனர் என்பதை நீதிபதி சுட்டிக்கட்டினார்.