Kathir News
Begin typing your search above and press return to search.

ரூ.320 கோடியில் விவசாயிகளுக்கு 28 புதிய திட்டங்கள்.. 10 ஆயிரம் வேலை வாய்ப்பு.. மத்திய அமைச்சர் தகவல்.!

ரூ.320 கோடியில் விவசாயிகளுக்கு 28 புதிய திட்டங்கள்.. 10 ஆயிரம் வேலை வாய்ப்பு.. மத்திய அமைச்சர் தகவல்.!

ரூ.320 கோடியில் விவசாயிகளுக்கு 28 புதிய திட்டங்கள்.. 10 ஆயிரம் வேலை வாய்ப்பு.. மத்திய அமைச்சர் தகவல்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Nov 2020 12:28 PM IST

இந்திய நாடு வேளாண்மையை சார்ந்த நாடு என்பது அனைவரும் அறிந்ததே. விவசாயிகள் விளைகின்ற பொருட்களை கெட்டுப்போகாமல் பாதுகாக்க மத்திய வேளாண்துணை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.


இந்நிலையில், உணவு பதப்படுத்துதல் அதில் பாதுகாப்பு திறன்களை உருவாக்குதல், விரிவுபடுத்துதல் போன்ற மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் பிரதமரின் கிரிஷி சின்சாயி திட்டம் போன்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக மத்திய உணவு பதப்படுத்துதல் துறை சார்பில் 28 புதிய திட்டங்களை உருவாக்கியுள்ளது.


இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கு ரூ.107 கோடியே 42 லட்சம் மானியத்துடன் ரூ.320 கோடியே 33 லட்சம் செலவழிக்க மேற்கண்ட வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சகங்களுக்கு இடையிலான கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த 28 திட்டங்களும் தமிழகம், கர்நாடகம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், குஜராத், உத்தரகாண்ட், அசாம், மணிப்பூர், ஜம்மு காஷ்மீர் மற்றும் மராட்டியம் ஆகிய 10 மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தினமும் 1,237 டன் அளவுக்கு பதப்படுத்துதல் தொடர்பான பணிகள் நடைபெறும்.

இந்த திட்டத்தினால் சுமார் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டு இருப்பதாக உணவு பதப்படுத்துதல் அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News