கவர்ச்சிகர திட்டங்களை அறிவித்து ரூ.6,380 கோடி மோசடி.. தனியார் நிறுவன அதிபர்கள் கைது.!
கவர்ச்சிகர திட்டங்களை அறிவித்து ரூ.6,380 கோடி மோசடி.. தனியார் நிறுவன அதிபர்கள் கைது.!
By : Kathir Webdesk
கவர்ச்சிகர திட்டங்களை அறிவித்து முறைகேடாக மக்களிடமிருந்து ரூ.6,380 கோடி அளவிற்கு முதலீடுகளை பெற்று மோசடியில் ஈடுபட்ட அக்ரி கோல்ட் குழும நிறுவனங்களின் அதிபர்கள் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோசடியில் ஈடுபட்ட அவ்வா வெங்கட ராமராவ், அவ்வா வெங்கட சேசு நாராயண ராவ், அவ்வா ஹேம சுந்தர வர பிரசாத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவாகியுள்ளது. ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இவர்கள் முதலீடு செய்யப்படும் பணத்தை வீட்டு மனைகள், விவசாய நிலங்களாக பெறலாம் அல்லது அதிக வட்டியுடன் திரும்ப கிடைக்கும் என ஆசை காட்டியுள்ளனர்.
இதனை நம்பி பலர் முதலீடு செய்திருக்கிறார்கள். அதிக கமிஷன் தந்து ஆயிரக்கணக்கான ஏஜென்ட்களை நியமித்து பணத்தை கறந்துள்ளனர். 32 லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.6,380 கோடி வசூலித்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.