இரண்டு பள்ளி மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ.960 கோடி ! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
பீகார் மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு சீருடை உள்ளிட்டவைகள் வாங்குவதற்கு அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு என்று மாணவர்களுக்கு வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு அதில் பணம் செலுத்தப்படுகிறது.
By : Thangavelu

இந்நிலையில், கதிகார் மாவட்டம், பகுரா பஞ்சாயத்தில் உள்ள பஸ்தியா கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் குருசந்திர விஷ்வாஸ், ஆசிஷ் குமார் ஆவார்கள்.
இரண்டு பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்று பார்க்க வங்கிக்கு சென்றனர். அப்போது வங்கி கணக்கை ஆராய்ந்ததில் ஒரு மாணவனின் கணக்கில் ரூ.900 கோடியும் மற்றொரு மாணவனின் கணக்கில் ரூ.60 கோடியும் இருப்பது தெரியவந்தது. இதனால் பெற்றோர்கள் மட்டுமின்ற வங்கி மேலாளரும் அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்த வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்க தடை விதித்து வங்கி மேலாளர் நடவடிக்கை எடுத்தார். தவறுதலாக செலுத்தப்பட்ட பணம் எங்கிருந்தது வந்தது என்று உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source,Image Courtesy:Maalaimalar