மக்கள் தொகை பெருக்கம் குறித்து மோகன் பகவத் என்ன கூறினார்?
பெருகிவரும் இந்தியாவின் மக்கள் தொகை குறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்து தெரிவித்துள்ளார்.

By : Mohan Raj
பெருகிவரும் இந்தியாவின் மக்கள் தொகை குறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்து தெரிவித்துள்ளார்.
அண்மையில் பெருகி வரும் உலக மக்கள் தொகை குறித்து ஐ.நா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில் உலக மக்கள் தொகையில் தற்பொழுது முதல் இடத்தில் இருக்கும் சீனாவை இந்தியா 2023'ஆம் ஆண்டுக்குள் பின்னுக்கு தள்ளி அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் எனக் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து பல்வேறு தலைவர்கள் பல்வேறு விதமான கருத்துக்களை கூறி வந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இது குறித்து தனது கருத்தை கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், 'விலங்குகளுக்கும் இங்கு உயிர் வாழ்கின்றன! மனிதனுக்கு மூளை மட்டும் இல்லை என்றால் உலகிலேயே பலவீனமான விலங்கு மனிதன் தான் ஆனால் உணவளிப்பதும், இனப்பெருக்கம் செய்வதும் விலங்குகளும் செய்யக்கூடிய ஒன்றுதான். உண்மையில் தகுதியானது அல்லது திறமையானது தான் உயிர் வாழும் என்பது விலங்குகளுக்கு தான் பொருந்தும் உண்மை இது மனிதர்களுக்கு அல்ல.
இதில் திறமையான மனிதர்கள் மற்றவர்கள் உயிர் வாழவும் அவர்களுக்கு உதவ வேண்டும். மனிதன் திறமைகளை பயன்படுத்தி இதனை சிறந்த உலகமாக மாற்ற வேண்டும்' எனக் கூறியுள்ளார்.
