Kathir News
Begin typing your search above and press return to search.

ராமர் கோவில் நிதி திரட்டல் போது RSS தலைவர் மீது துப்பாக்கிச் சூடு!

ராமர் கோவில் நிதி திரட்டல் போது RSS தலைவர் மீது துப்பாக்கிச் சூடு!

ராமர் கோவில் நிதி திரட்டல் போது RSS தலைவர் மீது துப்பாக்கிச் சூடு!

Saffron MomBy : Saffron Mom

  |  11 Feb 2021 11:14 AM GMT

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்காக நிதியைத் திரட்ட பல்வேறு இந்து அமைப்புகள் பேரணி மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். அந்த பேரணி நடத்துபவர்கள் மற்றும் பேரணியைச் சீர்குலைக்கக் கல்வீச்சுகள், தாக்குதல்கள் முதலியவற்றைச் செய்து வருகின்றனர். ராஜஸ்தானில் பிப்ரவரி 9 இல் ராமர் கோவிலுக்காக நிதி திரட்ட சென்ற RSS மாவட்ட தலைவர் தீபக் ஷாஹ் மீது துப்பாக்கிச் சூடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

செவ்வாய்க்கிழமை அன்று மாலை தீபக் ராமர் கோவிலுக்காக நிதி திரட்ட சென்றார். நிதி திரட்டிக் கொண்டிருக்கும் வேளையில் பைக்கில் வந்த மூன்று நபர்கள் தீபக் ஷாஹ் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அருகிலிருந்த பொதுமக்கள் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அவரை காண MLA சந்திரகாந்த மேகவால் மற்றும் முன்னாள் MLA ப்ரஹலாத் குஞ்சால் மருத்துவமனைக்குச் சென்றனர். ஷாஹ் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி RSS உறுப்பினர்கள் பலர் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதனை உள்ளூர் SP காவல் படையோடு குற்றவாளியைப் பிடிக்க இரவோடு இரவாகத் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஆஷு பாயா என்று கூறப்பட்டது. காவல்துறை மொபைலை ட்ராக் செய்து குற்றவாளிகளை ராய்ப்பூரில் வைத்து கைது செய்தனர்.

இந்த சம்பவமானது முன்பகை காரணமாக நடந்துள்ளது. முன்னர் RSS தலைவர் காவல்துறையிடம் புகார் அளித்த போது பாபு பாயா அச்சுறுத்தல் விடுத்துள்ளார். அந்த புகாரைத் தொடர்ந்து பாபு பாயா கைது செய்யப்பட்டார். இதற்குப் பழிவாங்கும் நோக்கில் பாபு பாயா சகோதரர் ஆஷு பாயா தீபக் ஷாஹ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News