அரசு பணத்தை உபயோகிக்காமல் சொந்த பணத்தில் சாப்பிடும் பிரதமர் மோடி - இந்த காலத்தில் இப்படி ஒருவரா?
உணவிற்காக தன்னுடைய சொந்த பணத்தை பிரதமர் மோடி அவர்கள் செலவழிக்கிறார் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விளக்கம்.
By : Bharathi Latha
அரசு மற்றும் அரசு சார்ந்த விவரங்கள் அரசின் கீழ் படி புரியும் அதிகாரிகளின் சம்பளங்கள் போன்ற பல்வற்றை நீங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுக் கொள்ளலாம். இந்திய குடிமகனுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இத்தகைய கருத்துக்களை பெறுவதற்கான உரிமை உண்டு. அந்த வகையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தன்னுடைய உணவிற்காக எவ்வளவு செலவு செய்கிறார் என்பது போன்ற RTI தரப்பிலிருந்து ஒருவர் கேட்டுள்ளார். அதற்கான பதில் தான் தற்போது கிடைத்து உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தன்னுடைய உணவிற்காக அரசு பட்ஜெட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட செலவழிக்கப்படவில்லை எனவும் தன்னுடைய தேவைகளுக்கு தானே சொந்த செலவில் அனைத்தையும் செய்து கொள்கிறார் எனவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் சார்பாக கூறப்பட்டுள்ளது. மேலும் நரேந்திர மோடி அவர்களின் உணவுக்கான செலவு, பாதுகாப்பு செலவு, வாகன செலவு உள்ளிட்டவை குறித்தும் பிரதமரின் சம்பளம் குறித்தும் தற்போது ஒருவர் RTI மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு தற்போது பிரதமர் அலுவலக செயலாளர் பினோத் பிஹாரி சிங் பதில் அளித்துள்ளார். அதில் பல்வேறு முக்கிய விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. பிரதமராக மோடி அவர்களின் உணவுக்கான செலவில் பட்ஜெட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட செலவழிக்கப் படவில்லை என்றும் தன்னுடைய சொந்த பணத்தில் தான் மோடி இவற்றை செய்து கொள்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்
Input & Image courtesy: News