இந்தியா, தேசபக்தர் மற்றும் ஹீரோவை இழந்து விட்டது: பிபின் ராவத் மறைவுக்கு ரஷ்யா தூதர் வருத்தமான இரங்கல்!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ராணுவ கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட உயர் அதிகாரிகள் கலந்து கொள்வதற்காக சென்றபோது இந்த துயரான சம்பவம் நடைபெற்றுள்ளது.
By : Thangavelu
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள காட்டேரி என்ற வனப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஹெலிகாப்டரில் பயணம் செய்த கேப்டன் வருண் சிங், 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவர்கள் அனைவரும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ராணுவ கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட உயர் அதிகாரிகள் கலந்து கொள்வதற்காக சென்றபோது இந்த துயரான சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த விபத்து தொடர்பாக இந்திய விமானப்படை விரிவான விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு இந்தியாவின் ரஷ்யா தூதர் நிகோலாய் குடாஷேவ் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் பிற உயர் அதிகாரிகள் மறைந்திருந்த செய்தியை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். இந்தியா தனது சிறந்த தேசபக்தர் மற்றும் அர்ப்பணிப்புள்ள ஹீரோவை இழந்து விட்டது. மேலும், ரஷ்யா ஒரு மிக நெருங்கிய நண்பரை இழந்து விட்டது. இந்தியாவுடன் சேர்ந்து வருந்துகிறோம். குட்பை, நண்பரே! பிரியாவிடை தளபதி! என குறிப்பிட்டுள்ளார்.
Source: Daily Thanthi
Image Courtesy: Twiter