Begin typing your search above and press return to search.
ரஷ்யாவிற்காக இந்தியாவில் ஏகே 203 துப்பாக்கிகள் தயாரிப்பு - மேக் இன் இந்தியா திட்டத்தில் அசுர பாய்ச்சல்

By : Kathir Webdesk
ரஷ்ய ரக கலாஷ்னிகோவ் ஏகே -203 ரக துப்பாக்கிகளைத் தயாரிக்க ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்தோ–ரஷ்யா ரைபிள்ஸ் பிரைவேட் லிமிட்டெட் என்ற பெயரில் உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் ஏகே 203 தயாரிப்பு இந்தியாவில் தொடங்கும். தயாரிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. உள்ளூர்மயமாக்கலின் கீழ் ரஷ்யாவின் துப்பாக்கிகளை 100 சதவீதம் இந்தியாவில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஏகே 203 துப்பாக்கி 3.8 கிலோ எடையுள்ளதாக இருக்கும் என்றும் இந்தத் துப்பாக்கி மூலம் 800 மீட்டர் வரை குறிவைக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. இந்தியா–ரஷ்யா இடையிலான ஒப்பந்தத்தின்படி, ரூ.5 ஆயிரம் கோடி செலவில் 6 லட்சம் ஏகே 203 துப்பாக்கிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளன.
Input From: Hindu Tamil
Next Story
