Kathir News
Begin typing your search above and press return to search.

ரஷ்யாவில் இருந்து ஐதராபாத் வந்தடைந்த ஸ்புட்னிக் 'வி' தடுப்பூசி.!

இந்த தடுப்பு மருந்துகளை டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் பெற்றுள்ளது. அடுத்ததாக 50 லட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்துகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவில் இருந்து ஐதராபாத் வந்தடைந்த ஸ்புட்னிக் வி தடுப்பூசி.!
X

ThangaveluBy : Thangavelu

  |  1 May 2021 5:03 PM IST

இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா நாட்டில் தயாரான ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இன்று விமானம் மூலம் ஐதராபாத்திற்கு வந்தடைந்தது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ளது. உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.

இதனிடையே இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அவரது பேச்சு வார்த்தைக்கு பின்னர் முதற்கட்டமாக 1.50 லட்சம் தடுப்பு மருந்துகம் ஐதராபாத்திற்கு விமானம் மூலம் வந்து சேர்ந்துள்ளது.




இந்த தடுப்பு மருந்துகளை டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் பெற்றுள்ளது. அடுத்ததாக 50 லட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்துகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பு மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது மூன்றாவதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி இணைந்துள்ளது. விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News