Kathir News
Begin typing your search above and press return to search.

மத்திய அரசு நடவடிக்கையால் ஸ்புட்னிக்வி தடுப்பூசி இன்று இந்தியா வருகிறது.!

இந்தியா முழுவதும் 15 கோடி பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

மத்திய அரசு நடவடிக்கையால் ஸ்புட்னிக்வி தடுப்பூசி இன்று இந்தியா வருகிறது.!
X

ThangaveluBy : Thangavelu

  |  1 May 2021 3:59 PM IST

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதுவரை இந்தியா முழுவதும் 15 கோடி பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.





இதற்காக தடுப்பூசிகள் அதிகளவு தேவைப்படும். தற்போது இந்தியாவில் உள்ள 2 தடுப்பூசிகளின் சப்ளை இல்லை. எனவே மாற்று ஏற்பாடாக வேறு தடுப்பூசிகளையும் வாங்குவதற்கு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. அதன்படி ரஷ்யா தயாரிப்பான ஸ்புட்னிக்வி என்ற தடுப்பூசியை வழங்க அந்த நாட்டு அரசு முன்வந்தது. இது தொடர்பாக பிரதமர் மோடி சமீபத்தில் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.





இதனை தொடர்ந்து அவசர தேவையை கருத்தில் கொண்ட ரஷ்யா உடனடியாக தடுப்பூசி மருந்தை இந்தியாவுக்கு வழங்க ஒப்புதல் அளித்தது. அதன்படி இன்று இந்தியா வந்து சேர்கிறது. எவ்வளவு தடுப்பு மருந்துகள் வரும் என்று அறிவிக்கப்படவில்லை. ஒரு வேளை அதிகப்படியான மருந்து அனுப்பும் பட்சத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விரைந்து தடுப்பூசி போடுவதற்கு வசதியாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.





ஸ்புட்னிக் தடுப்பூசி மருந்தை உலகம் முழுவதும் சுமார் 60 நாடுகள் பயன்படுத்தி வருகின்றது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே முதன் முதலில் தயாரான கொரோனா தடுப்பூசி மருந்து இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News