சபரிமலையில் இன்று நடை திறப்பு: தடுப்பூசி சான்றிதழ் பக்தர்களுக்கு கட்டாயம்!
கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட்டு மண்டலகால பூஜைகள் நடைபெற உள்ளது. நாளை (நவம்பர் 16) அதிகாலை 4 மணிக்கு மண்டலகாலம் ஆரம்பமாகிறது.
By : Thangavelu
கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட்டு மண்டலகால பூஜைகள் நடைபெற உள்ளது. நாளை (நவம்பர் 16) அதிகாலை 4 மணிக்கு மண்டலகாலம் ஆரம்பமாகிறது. கார்த்திகை முதல் நாள் கேரளாவில் தமிழகத்தை விட முன்னரே வரும் நிலையில், இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை நடை திறக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சபரிமலைக்கு பக்தர்கள் செல்கின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக வாட்டி வதைத்து வரும் கொரோனா தொற்றால் சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை கோயில் நிர்வாகம் விதித்துள்ளது. அதன்படி கோயிலுக்கு வரும் பக்தர்கள் இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டது அல்லது 72 மணி நேரத்துக்கு முன்னர் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழை கட்டாயர் எடுத்து வரவேண்டும். அது மட்டுமின்றி ஆதார் ஒரிஜினல் அட்டையுடன் வரவேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் சரியாக இருந்தால் மட்டுமே பக்தர்கள் மலையேறுவதற்கு போலீசார் அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும், முன்பதிவு செய்யாமல் செல்லும் பக்தர்களுக்கு நிலக்கல்லில் 'ஸ்பாட் புக்கிங்' வசிதியும் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Dinamalar