சபரிமலை பக்தர்கள் விமானங்களில் இருமுடி பைகளை எடுத்து செல்ல முடியுமா? சிவில் விமான பாதுகாப்பு சொல்லும் ரூல்ஸ்!
By : Kathir Webdesk
தேங்காய் எரியும் தன்மைகொண்டது என்பதால் விமானங்களில் அதனை எடுத்துச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சபரிமலை செல்லும் பக்தர்கள் விமானங்களில் பயணம் செய்யும்போது தேங்காய், நெய் ஆகியவை அடங்கிய இருமுடி பைகளை தங்களுடன் எடுத்துச் செல்ல சிவில் விமான பாதுகாப்பு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
சபரிமலை சீசன் முடிவடையும் ஜனவரி இறுதிவரை இந்த தளர்வுகளை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அனுமதி இருந்தாலும், எனினும், எக்ஸ்-ரே, வெடிகுண்டு சோதனை கருவி,உடல் பரிசோதனை ஆகியவற்றை பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய பிறகே பக்தர்கள் தங்களது இருமுடியை விமானங்களில் கொண்டு செல்ல முடியும்.
இதற்காக, பாதுகாப்பு விதிமுறைகளில் குறுகிய காலத்துக்கு தளர்வுகளை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். அவர்களில் பெரும்பாலும் இருமுடி கட்டிக் கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்களின் வசதிக்காக விதிகள் மாற்றப்பட்டதாக சிவில் விமான பாதுகாப்பு அமைப்பின் அதிகாரி கூறினார்.
Input From: Thenewsglory