"அழிந்து வரும் மண் வளத்தை மீட்க அவசர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" உலக மண் தினத்தில் சத்குரு கோரிக்கை !
By : Dhivakar
"அழிந்து வரும் நம் மண் வளத்தை மீட்டெடுக்க அனைத்து தேசங்களும் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று உலக மண் தினமான இன்று (டிசம்பர் 5) ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"விவசாயம் செய்வதற்கு மண்ணில் குறைந்தப்பட்சம் 3 சதவீதமாவது கரிமப் பொருட்கள் கட்டாயம் இருக்க வேண்டும்" என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நம் உடலிற்கு மூலமான உயிருள்ள இம்மண், முழு அழிவை நோக்கிப் போய் கொண்டிருக்கிறது. இதனை மிகுந்த அவசரத்துடன் அணுகுவது, எல்லா தேசங்களும் நிறைவு செய்ய வேண்டிய மிக முக்கிய பொறுப்பாக இருக்கிறது. நாம் இதனை நிகழச் செய்வோம்" என கூறியுள்ளார்.
Living Soil, our very body, is moving towards extinction. Addressing this with utmost urgency is the most important Responsibility that all nations have to fulfill. #ConsciousPlanet. Let Us Make It Happen. - Sg #WorldSoilDay#SaveSoil @UNCCD @UNEP @FAO pic.twitter.com/c3oG2qWcJb
— Sadhguru (@SadhguruJV) December 5, 2021