Kathir News
Begin typing your search above and press return to search.

வாரணாசி விமான நிலையத்தில் சமஸ்கிருத மொழியிலும் அறிவிப்பு! இழந்த வரலாற்றை மீட்ட யோகி அரசு!

வாரணாசி விமான நிலையத்தில் சமஸ்கிருத மொழியிலும் அறிவிப்பு! இழந்த வரலாற்றை மீட்ட யோகி அரசு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Jun 2022 12:31 AM GMT

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி விமான நிலையத்தில் ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் அறிவிப்பு வெளியாகிறது. அவற்றுடன் சமஸ்கிருத மொழியிலும் கொரோனா தடுப்பு விதிமுறைகள் அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.

முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க அரசு இதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. இதற்கு முன்னர் வாரணாசி சர்வதேச விமான நிலையத்தில் ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் பற்றிய அறிவிப்பு வெளியாகி வந்தன. இந்நிலையில் சமஸ்கிருதத்திலும் அறிவிப்பு வெளியானது. வாரணாசி விமான நிலைய நிர்வாகம் இது குறித்த தகவலை சமூக வலைதளத்திலும் வெளியிட்டுள்ளது.

இது பற்றி விமான நிலையத்தின் இயக்குனர் ஆர்யமா சன்யால் கூறுகையில், பழங்காலத்திலிருந்தே சமஸ்கிருத மொழியின் மையமாக வாரணாசி இருந்து வந்துள்ளது. எனவே, அந்த மொழிக்கு உரிய அங்கீகாரமும், முக்கியத்துவமும் தரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Input from: Dinamalar


Next Story
கதிர் தொகுப்பு
Trending News