தமிழகத்தை சேர்ந்த தன்னை JNU பல்கலைக்கழக துணை வேந்தராக நியமனம் செய்த பிரதமருக்கு நன்றி: சாந்திஸ்ரீ பண்டிட்!
டெல்லியில் அமைந்துள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தராக தமிழகத்தை சேர்ந்த சாந்திஸ்ரீ பண்டிட்டை மத்திய அரசு நியமித்துள்ளது. இதற்காக அவர் பிரதமர் மோடி மற்றும் கல்வித்துறை அமைச்சருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
By : Thangavelu
டெல்லியில் அமைந்துள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தராக தமிழகத்தை சேர்ந்த சாந்திஸ்ரீ பண்டிட்டை மத்திய அரசு நியமித்துள்ளது. இதற்காக அவர் பிரதமர் மோடி மற்றும் கல்வித்துறை அமைச்சருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் புகழ்பெற்ற ஜவகர்லால் நேரு பல்கலைக்கத்தின் துணை வேந்தராக இருந்த ஜெகதீஷ்குமார் சமீபத்தில் யுஜிசி தலைவராக மத்திய அரசு நியமித்தது. இதனால் அவர் அப்பொறுப்பில் இருந்து விடுப்பட்டார். இதனால் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணை வேந்தரை நியமனம் செய்ய பரிசீலனை நடைபெற்றது. அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சாவித்திரிபாய் பல்கலைகழகத்தில் பணியாற்றி வந்த சாந்திஸ்ரீ பண்டிட் 59 என்பவரை நியமனம் செய்து மத்திய கல்வித்துறை அமைச்சகம் உத்தரவை பிறப்பித்தது. டெல்லி பல்கலைக்கழகத்தில் சாந்திஸ்ரீ பண்டிட் தனது எம்.பில். மற்றும் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தான் படித்த பல்கலையிலேயே துணைவேந்தராக பதவி ஏற்க உள்ளார்.
இந்நிலையில், ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்தில் தன்னை துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய கல்வித்துறை அமைச்சகத்துக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். தமிழரான தன்னை டெல்லி பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணை வேந்தராக நியமனம் செய்தது மிகப்பெரிய மகிழ்ச்சியில் இருப்பதாகவும் இது எனக்கு கிடைத்த கவுரவும் என குறிப்பிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Daily Thanthi