'பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய சரத் பவார் குடியரசு தலைவரானால் பயங்கவாதம் அதிகரிக்கும்' - பா.ஜ.க எம்.பி பரபரப்பு புகார்
'சரத்பவாருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருந்தது அவர் குடியரசுத் தலைவரானால் நாட்டில் பயங்கரவாதம் அதிகரிக்கும்' என பா.ஜ.க மூத்த தலைவர் திலீப் குமார் கூறியுள்ளார்.

By : Mohan Raj
'சரத்பவாருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருந்தது அவர் குடியரசுத் தலைவரானால் நாட்டில் பயங்கரவாதம் அதிகரிக்கும்' என பா.ஜ.க மூத்த தலைவர் திலீப் குமார் கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன, இந்த தேர்தலை முன்னிட்டு எதிர்க் கட்சிகளின் சார்பாக பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நேற்றைய தினம் ஆலோசனை மேற்கொண்டார்.
அந்தக் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்னிறுத்த முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது, ஆனால் சரத் பவார் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட மறுத்து விட்டார்.
இந்த நிலையில் பா.ஜ.க'வின் அகில இந்திய துணைத் தலைவரும் மேற்கு வங்க எம்.பி'யுமான திலீப் கோஷ் டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 'தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருந்தது, அப்படிப்பட்டவர் குடியரசுத் தலைவராக இருந்தால் நாட்டில் பயங்கரவாதம் அதிகரிக்கும். அதனால் யாரும் முட்டாளாக இருக்க விரும்பவில்லை' என கூறினார்.
மம்தா பானர்ஜி எல்லாரும் ஒரு முறை சொன்னால் சரத் பவார் ஏற்றுக்கொள்வர் என நினைக்கிறார் ஆனால் அவரது பெயரை யாரும் கூறவில்லை, அகில இந்திய தலைவராக வரவேண்டும் என்பது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நீண்ட நாள் கனவு' எனவும் திலீப் கோஷ் கூறினார்.
