Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவின் உள்கட்டமைப்பை வெற்றிகரமாக்கிய பிரதமர் மோடி - ஒரு பார்வை

இந்தியாவின் உள்கட்டமைப்பை வெற்றிகரமாக்கிய பிரதமர் மோடி - ஒரு பார்வை

ThangaveluBy : Thangavelu

  |  4 Jun 2022 6:21 AM GMT

ஒரு இரவு ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலும், 2 நாட்கள் விமானத்தில் கழித்திருந்தாலும் 2022ம் ஆண்டு மே 25ம் தேதி காலை 5 மணியளவில் பாலம் விமானப் படை தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் உற்சாகமாக வந்திறங்கினார். மொத்தம் 41 மணி நேர இடைவெளியில் 24 கூட்டங்களில் பங்கேற்றுள்ளார்.

பிரதமராக அவருக்கு மீண்டும் வேலை வந்தது. அதாவது அமைச்சரவைக் கூட்டம், உள்கட்டுமான திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம், இதனிடையே ஒடிசாவில் உயிரிழந்த 6 சுற்றுலாப் பயணிகளின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார். அதனை முடித்துக்கொண்டு அன்றை நாளின் இறுதியில் ஐதராபாத்திலும், சென்னையிலும் இருப்பேன் என தனது ட்விட்டர் பதிவின் மூலம் குறிப்பிட்டிருந்தார். இதுதான் பிரதமர் மோடியின் வழி. இதற்கு மத்தியில் இந்த வாரத்தில் நரேந்திர மோடி பிரதமராக அவர் 8 ஆண்டுகளையும் நிறைவு செய்தார். அது மட்டுமின்றி நவீன உயர்தரத்துடன், எதிர்காலத்திற்கான அம்சங்களுடன், நீடித்த உள்கட்டமைப்பு உருவாக்கும் எண்ணங்களுடன் 9வது ஆண்டை அடியெடுத்து வைத்துள்ளார்.குஜராத்தில் 2002 - 2010 ஆண்டுக்கு இடைப்பட்ட 8 ஆண்டு காலத்தில் நாளைய கட்டுமானத்தை இன்றைக்கு எப்படி சாத்தியப்படுத்துவது என்பதனை கற்றுக்கொண்டேன். 2014ல் குஜராத் மாடலை டெல்லிக் கொண்டு வந்து அதனை நாடு முழுவதிலும் அதிகப்படுத்தினார். முதலமைச்சராக இருந்த மோடியை விட பிரதமர் மோடி தொழில்நுட்பத்தில் சிறப்பாக செயல்படும் அரசாகவும், குறித்த நேரத்திற்கு செயல்படுத்தும் அரசாகவும் இருந்துள்ளார்.

மேலும், கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி மகாத்மா காந்தியின் 145வது பிறந்தநாளில் உலகத்தரத்தில் பாதுகாப்பைப் பெறுவதற்கு தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டம் கடந்த 5 ஆண்டுகளில், அனைத்து கிராமங்கள், கிராம ஊராட்சிகள், மாவட்டங்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தங்களை திறந்தவெளி மலம் கழிக்கா பகுதிகளாக தங்களை அறிவித்தது. அதற்கு என்று சுமார் 10 கோடி வீடுகளுக்கு மத்திய அரசு இலவசமாக கழிவறையை கட்டிக்கொடுத்தது.

தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி நேரடியாக கண்காணித்து வந்தார். இதனால் நாட்டின் தூய்மை அதிகரிக்க தொடங்கியது. அனைத்து மாநகரங்கள், நகரங்கள், ஊராட்சிகள் என்று அனைத்து இடங்களிலும் சுத்தமாக இருக்கின்ற நிலை தொடர்ந்து வருகிறது. மேலும், கழிப்பறைகள் எத்தனை கட்டப்பட்டது என்பதனை தெரிந்து கொள்ள நாடு தழுவிய அளவிலான ஆய்வு பணிகளும் தொடங்கியது.

தூய்மை இந்தியா திட்டம் 1.0 பிரதமர் மோடியை மிகப்பெரிய உருவமாக மாற்றியது. தற்போது தூய்மை இந்தியா 2.0 நகரங்களை குப்பைகள் இல்லாத பகுதிகளாக மாற்றுவதற்கு முனைப்பு காட்டி வருகிறது. இத்திட்டம் 50 சதவீதம் கடந்தாலே நகர்ப்புற இந்தியாவை மாற்றியமைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Source: News 18 Tamilnadu

Image Courtesy: The Statesman

Next Story
கதிர் தொகுப்பு
Trending News