Kathir News
Begin typing your search above and press return to search.

மீண்டும் இந்திய எல்லையில் பாகிஸ்தானின் சுரங்கப்பாதையைக் கண்டறிந்த பாதுகாப்புப் படை!

மீண்டும் இந்திய எல்லையில் பாகிஸ்தானின் சுரங்கப்பாதையைக் கண்டறிந்த பாதுகாப்புப் படை!

மீண்டும் இந்திய எல்லையில் பாகிஸ்தானின் சுரங்கப்பாதையைக் கண்டறிந்த பாதுகாப்புப் படை!

Saffron MomBy : Saffron Mom

  |  15 Jan 2021 5:40 PM GMT

இந்தியாவில் அத்துமீறி நுழைவதற்கான பாகிஸ்தான் ஏற்பாடு செய்திருந்த சதி முயற்சியை மீண்டும் இந்திய பாதுகாப்புப் படையினர் முறியடித்துள்ளனர். புதன் கிழமை பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில், ஜம்மு&காஷ்மீரில் கத்துவா மாவட்டத்தில் உள்ள இந்தோ-பாகிஸ்தான் எல்லையில் அமைக்கப்பட்டிருந்த 150 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதையைக் கண்டறிந்துள்ளது.

சம்பா மற்றும் கத்துவா மாவட்டத்தின் எல்லையில் சுரங்கப்பாதை இருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்ததன் பெயரில் சுரங்கப்பாதை கண்டறியும் முயற்சியின் போது இந்த சுரங்கப்பாதை கண்டறியப்பட்டது. மேலும் இந்த சுரங்கப்பாதை போப்பியன் கிராமத்தில் ஹிரனகர் பகுதியில் 25-30 அடி ஆழத்தைக் கொண்டு பாகிஸ்தானில் இருந்து 20-30 மீட்டரில் இந்திய வேலியை வந்தடைகின்றது என்று BSF இன்ஸ்பெக்ட்டர் N S ஜாம்வால் தெரிவித்தார்.

மேலும், "இந்த சுரங்கப்பாதையானது பாகிஸ்தானால் உருவாக்கப்பட்டு பாகிஸ்தானில் ஷாகர்கரில் இருந்து தொடங்குகின்றது. இந்த மாவட்டமானது எல்லை மீறி தீவிரவாதிகளை அனுப்பும் மோசமான மாவட்டமாகும்," என்றும் BSF IG தெரிவித்தார். இதுபோன்று சுரங்கப்பாதையைக் கண்டுபிடித்தது இது முதன்முறை அல்ல முன்னரும் ஒன்று கண்டறியப்பட்டது. முன்னரும் ரகசிய சுரங்கப்பாதை வழியாக இந்தியாவிற்குள் அத்துமீறி நுழையப் பாகிஸ்தான் முயன்றுள்ளது. இருப்பினும் பாகிஸ்தானின் முயற்சியைத் தொடர்ந்து இந்திய இராணுவம் முறியடித்துக் கொண்டே வருகின்றது.

முன்னர் நவம்பர் மாதத்தில் சம்பா மாவட்டத்தில் இதுபோன்ற சுரங்கப்பாதை கண்டறியப்பட்டது. அதன் நுழைவு வாசலைக் கண்டுபிடிக்க இந்திய இராணுவம் அதில் டிசம்பர் 1 இல் 200 மீட்டர் தொலைவு சென்றது. மேலும் அந்த சுரங்கப்பாதை மணலால் மூடப்பட்டு புல் மற்றும் புதரால் மறைக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த சுரங்கப்பாதையில் மண் மூட்டைகளையும் பாதுகாப்பது படையினர் கண்டறிந்தனர்.அந்த பைகள் அனைத்தும் பாகிஸ்தான் கராச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News