Kathir News
Begin typing your search above and press return to search.

2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் இலக்கை எட்ட தயார் நிலையில் இந்தியா : 2.6 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் துறை!

Services Export target of $1 Trillion by 2030 Piyush Goyal

2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் இலக்கை எட்ட தயார் நிலையில் இந்தியா : 2.6 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் துறை!
X

MuruganandhamBy : Muruganandham

  |  11 Nov 2021 2:51 PM GMT

2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் சேவைகள் ஏற்றுமதி இலக்கை எட்ட இந்தியா தயாராக உள்ளது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு சேவைகள் முக்கிய உந்து சக்தியாக இருப்பதாக கூறினார். சேவைத் துறையானது கிட்டத்தட்ட 2.6 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதாகவும், இந்தியாவின் மொத்த உலகளாவிய ஏற்றுமதியில் சுமார் 40 சதவீத பங்களிப்பதாகவும் அவர் கூறினார்.

2020-21 நிதியாண்டில் சேவைகள் வர்த்தக உபரி $89 பில்லியன் என்றும், மிகப்பெரிய அளவில் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கும் துறையாக இது உள்ளது என்றும் அவர் கூறினார். 2000-2021ல் 53% அந்நிய நேரடி முதலீடு சேவை துறை மூலம் வந்துள்ளது.

பல்வேறு ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டங்களின் கீழ் ரூ. 56,027 கோடி வெளியிடப்பட்டுள்ளது என்றும் MSME-ன் கீழ் ரூ 10,002 கோடி வெளியிடப்பட்டது என்றும் அவர் கூறினார். உலகின் சிறந்த சேவைகள் ஏற்றுமதியாளராக இந்தியா உருவாக வாய்ப்பு உள்ளது என்று கூறிய அமைச்சர், அறிவு சார்ந்த பொருளாதாரமாக இந்தியா மாறுவதை சேவைகள் துறை ஊக்குவிக்கிறது என்றார்.

இந்தியா பேக் ஆபிஸ் போல செயல்பட்டு, உலகின் பிரெய்ன் ஆபிஸ் என்ற நிலைக்கு மாறியுள்ளது. திறன் மேம்பாட்டில், குறிப்பாக AI, பிக் டேட்டா, ரோபாட்டிக்ஸ் போன்ற வளர்ந்து வரும் பகுதிகளில் இந்தியாவின் முன்முயற்சிகள் அபாரமானவை. அரசின் குறுக்கீடு அதிகம் இல்லாத நிலை, தொழில்நுட்பத் துறையை சிறந்து விளங்கச் செய்துள்ளது




Next Story
கதிர் தொகுப்பு
Trending News