சீதாராம் யெச்சூரியின் மகன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு.!
, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் கொரோனா தொற்றால் உயிரிழந்து விட்டார் என்று ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஷ் யெச்சூரி கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று 2வது அலை வீசத்தொடங்கியுள்ளது. தினமும் 3 லட்சத்தை நெருங்கி வருவதால் மருத்துவர்கள் மட்டுமின்றி, மத்திய, மாநில அரசுகளும் திணறியுள்ளது.
முதல் அலையை விட தற்போது இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. தொற்று அறிகுறி இல்லாமலே சிலர் இறக்கும் நிலையும் உருவாகியுள்ளது. தற்போது அரசியல் பிரமுகர்கள், மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தொற்றால் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் கொரோனா தொற்றால் உயிரிழந்து விட்டார் என்று ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தனது மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரி 34, கொரோனா தொற்றால் உயிரிழந்து விட்டார். நாளிதழில் ஆஷிஷ் யெச்சூரி பணியாற்றி வந்த நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். அவரது மறைவு மிகவும் வேதனை அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.