Kathir News
Begin typing your search above and press return to search.

5ஜி அலைக்கற்றை விற்பனைக்கு இத்தனை போட்டியா? ஏழாவது நாளாக தொடரும் ஏலம்.

ரூ.1 1/2 லட்சம் கோடியைக் கடந்த 5ஜி அலைக்கற்றை விற்பனை.

5ஜி அலைக்கற்றை விற்பனைக்கு இத்தனை போட்டியா? ஏழாவது நாளாக தொடரும் ஏலம்.

KarthigaBy : Karthiga

  |  1 Aug 2022 10:00 AM GMT

அதிவேக இணையதள வசதியைக் கொடுக்கும் 5ஜி அலைக்கற்றை விற்பனைக்கான ஏலம் கடந்த 26-ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடபோன்- ஐடியா மற்றும் அதானி குழுமம் என நான்கு நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கெடுத்து தொடர்ந்து அலைக்கற்றையை சொந்தமாக்கி வருகின்றன.

இதில் 6-வது நாளாக நேற்றும் 7 சுற்று ஏலம் நடந்தது .இதில் ரூபாய் 163 கோடிக்கு அலைவரிசை ஏலம் போனது. இதன் மூலம் கடந்த 6 நாட்களாக நடந்த 5ஜி ஏலத்தில் ரூபாய் 1, 50,130 கோடி அலைக்கற்றை விற்பனை நடந்து உள்ளது.

இந்த ஏலம் 7-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. உத்தரபிரதேசத்தில் கிழக்கு வட்டத்தில் ரேடியோ அலைகளுக்கான தேவை அதிகரித்ததைத் தொடர்ந்து அலைக்கற்றை ஏலம் ஏழாவது நாளுக்கு தள்ளிப் போயிருப்பதாக தொலைத்தொடர்பு வட்டார அதிகாரிகள் தெரிவித்தனர்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News