இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் எப்படி இருக்கும்: தென்னாப்பிரிக்க நிபுணர் பேட்டி!
இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று அதிகரிக்கும் என்று தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றை கண்டுப்பிடித்த நிபுணர் ஏஞ்சலிக் கோயட்சி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
By : Thangavelu
இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று அதிகரிக்கும் என்று தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றை கண்டுப்பிடித்த நிபுணர் ஏஞ்சலிக் கோயட்சி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் மருத்துவ சங்கத்தின் தலைவரும், டாக்டர் ஏஞ்சலிக் கோயட்சி என்பவர் முதன் முதலில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றை கண்டுப்பிடித்து உலக நாடுகளுக்கு தகவல் கொடுத்தார். இதன் பின்னரே உலக நாடுகள் ஒமைக்ரான் தொற்று குறித்து சோதனைகளை மேற்கொண்டது.
இந்நிலையில், தொலைபேசி வாயிலாக இந்திய செய்தி நிறுவனத்திற்கு டாக்டர் ஏஞ்சலிக் கோயட்சி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: ஒமைக்ரான் தொற்று குறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை. ஆனாலும் வேகமாக பரவி வருகிறது. இருந்த போதிலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு நோயின் தீவிரம் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.
ஒமைக்ரானை பொருத்தவரையில் வெதுவெதுப்பான உடலை தாக்கிவிட்டு அங்கு குடிபெயரும். குழந்தைகளையும் ஒமைக்ரான் தொற்று தாக்கும் இருந்தபோதிலும் அவர்கள் 6 நாட்களில் குணமடைந்து விடுவார்கள். எதிர்காலங்களில் வைரஸ் தீவிரமாக உருவெடுக்கலாம். அல்லது உருமாறவும் வாய்ப்பு இருக்கிறது. மேலும், இந்தியாவை பொறுத்தவரையில் ஒமைக்ரான் பாதிப்பு வேகமாக உயரும். ஆனால் தென்னாப்பிரிக்காவில் நடந்ததை போன்று பெரும்பாலான மக்களுக்கு நோயின் தீவிரம் லேசாகவே இருக்கும். இவ்வாறு அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
Source: Maalaimalar
Image Courtesy: EastMojo