அவங்களுக்கு முஸ்லீம் ஓட்டுகள் தான் வேண்டும்.. முஸ்லீம் தலைவர்கள் தேவையில்லை - தமிழக அரசியலை நினைவுபடுத்தும் உ.பி தேர்தல்!
sp-only-wants-muslim-votes-not-muslim-leadership-maulana-shahabuddin-rizvi
By : Kathir Webdesk
அகில இந்திய தன்சீம் உலமா இ இஸ்லாம் கட்சியின் பொதுச் செயலாளர் மௌலானா ஷஹாபுதீன் ரிஸ்வி, சமாஜ்வாடி கட்சி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
அவர்கள் முஸ்லிம்களின் வாக்குகளை மட்டுமே விரும்புகின்றனர். முஸ்லீம் தலைமையை அல்ல. சமாஜ்வாடி கட்சி முஸ்லிம் வாக்குகளை குறி வைக்கிறது. ஆனால் முஸ்லீம் தலைமையை முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறது" என்று கூறினார். பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள இந்த உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
முஸ்லீம்கள் இந்த சட்டமன்றத் தேர்தலில் அரசியல் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். சமாஜ்வாடி கட்சியை விரும்பவில்லை. மாறாக காங்கிரஸ் அல்லது அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைமை வேண்டும் என்கிறார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இரண்டாம் கட்டம் பிப்ரவரி 14ஆம் தேதியும், மூன்றாம் கட்டம் பிப்ரவரி 20ஆம் தேதியும், நான்காவது கட்டம் பிப்ரவரி 23ஆம் தேதியும், ஐந்தாம் கட்டம் பிப்ரவரி 27ஆம் தேதியும், ஆறாவது கட்டம் மார்ச் 3ஆம் தேதியும், ஏழாவது கட்டம் மார்ச் 7ஆம் தேதியும் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடைபெறும்.
உத்திரப்பிரதேச அரசியலைப்போலவே தமிழகத்திலும் சில கட்சிகள் சிரும்பான்மையினர் வாக்குகளைத் தான் குறி வைக்கின்றனரே தவிர, சிறுபான்மையினர் ஆட்சி அதிகாரத்தில் வர வேண்டுமென ஒருபோதும் நினைப்பதில்லை. விளக்கை தேடி சென்று விழும் விட்டில் பூச்சிகள் போல அவர்களின் நிலை மாறிவிட்டது.