கேரளாவில் நிபா வைரஸ் எதிரொலி ! தமிழக எல்லையில் சிறப்பு மருத்துவ குழு கண்காணிப்பு !
கேரளாவில் இருந்து தமிழகம் வருகின்ற அனைத்து வழித்தடங்களிலும் சிறப்பு மருத்துவ குழு நிறுத்தவும், சாலை மார்க்கமாக வருகின்றவர்களுக்கு பரிசோதனை செய்யவும், நிபா வைரஸ் அறிகுறி இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தவும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
By : Thangavelu

தமிழகத்தின் அருகே உள்ள மாநிலமான கேரளாவில் 20க்கும் மேற்பட்டோருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் நிபா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான 12 வயது சிறுவன் சமீபத்தில் உயிரிழந்துள்ளான்.
இதனால் தமிழகத்தில் நிபா வைரஸ் பரவுவதை தடுக்கின்ற வகையில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. நிபா வைரஸ் அறிகுறியுடன் உள்ளவர்களை எப்படி கண்டுப்பிடிப்பது மற்றும் தேவையான தடுப்பு நடவடிக்கை குறித்தும் மாவட்ட துணை பொது சுகாதார இயக்குனர்களுக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
Source, Image கோடெஸி :Daily Thanthi