அயோத்தியில் கோவில் கட்ட ராஜஸ்தானில் இருந்து பிரத்யேக இளஞ்சிவப்பு கற்கள்.!
அயோத்தியில் கோவில் கட்ட ராஜஸ்தானில் இருந்து பிரத்யேக இளஞ்சிவப்பு கற்கள்.!

அயோத்தியில் கோவில் கட்ட ராஜஸ்தானில் இருந்து பிரத்யேக இளஞ்சிவப்பு கற்கள்: ஸ்ரீராமருக்காக தடையை நீக்கி மாநில அரசு சிறப்பு நடவடிக்கை
ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கு தேவையான கற்கள் மற்றும் இதர உலோக பொருட்கள் நாடு முழுவதும் இருந்து பக்தர்களாலும், பக்த அமைப்புகளாலும் அனுப்பி வைக்கப் படுகின்றன.
கடந்த 1989-ம் ஆண்டில் நடை பெற்ற கரசேவை பணியில் இருந்தே சிறுது சிறிதாக சேகரிக்கப்பட்டு வருகின்றன. அப்போது பக்தர்களால் அனுப்பப் பட்ட பொருள்கள் கற்கள் இன்றும் அங்குள்ள வழக்கத்தில் குவியல் குவியலாக உள்ளன.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம், பாரத்பூர் மாவட்டம், வம்சி பகாட்பூரில் உள்ள வனவிலங்குகள் சரணாலயத்தில் இருந்து இளஞ்சிவப்பு நிற மணற்கற்கள், அயோத்திக்கு ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த இளஞ்சிவப்பு நிற மணற்கற்கள் ஆயிரம் ஆண்டுகள் வரை சிதையாமல் பலமுடன் இருக்கும் தன்மை கொண்டவை. செங்
கோட்டை, நாடாளுமன்ற கட்டிடம் உள்ளிட்டவை இந்த வகை கற்களால் கட்டப்பட்டவை.
இக்கற்கள் இப்போது மேலும் தேவைப் படுகிறது. இந்நிலையில், வம்சி பகாட்பூர் வனவிலங்குகள் சரணாலயத்தில் இருந்து இளஞ்சிவப்பு நிற மணற்கற்களை வெட்டி எடுக்க கடந்த 2016-ம் ஆண்டில் தடை விதிக்கப்பட்டது.
தடை காரணமாக ராமர் கோயில் கட்டுமானத்துக்காக ராஜஸ்தானில் இருந்து கற்களை வெட்டி எடுப்பதில் தடங்கல் ஏற்பட்டது.
இதுகுறித்து விஸ்வ இந்து பரிஷத் செய்தித் தொடர்பாளர் சரத் சர்மா கூறும்போது, "அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு 3.5 லட்சம் முதல் 4 லட்சம் கியூபிக் அடி மணற்கற்கள் தேவைப்படுகிறது. இதில் 1.1 லட்சம் கியூபிக் அடி இளஞ்சிவப்பு மணற்கற்களை ராஜஸ்தானில் இருந்து ஏற்கெனவே கொண்டு வந்துவிட்டோம். மீதமுள்ள கற்களையும் கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம். தரை தளத்துக்கு தேவையான கற்களில் 45 சதவீத கற்களை செதுக்கிவிட்டோம்" என்றார்.
இநிலையில்,ராஜஸ்தான் மாநில அரசு தனது நிலைப்பாட்டை மாற்றி ராமர் கோயிலுக்காக கற்களை வெட்டி எடுக்க முடிவு செய்திருக்கிறது என்றும் அதற்கான உத்தரவை தொடர்புடைய அதிகாரிகள் மூலம் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.